Movie review: "What Women Want" by Nancy Meyers

நேற்று இந்தத் திரைப்படத்தைப் முதல் முறையாக என்னுடைய கணவரோடு சேர்ந்து பார்த்தேன். எதேச்சையாகத் தான் பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் போகப் போக எனக்கு படம் மிகவும் பிடித்துப்போனது. முதல் காரணம் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் Nancy meyers. இவரின் The Holiday மிகவும் பிரபலமான ஒரு feel-good திரைப்படம். இரண்டாவது காரணம் இந்தப் படத்தின் கதைக்களம். A male chauvinistic womanizerகு ஒரு நாள் electric shock அடித்து பெண்கள் மனதில் நினைக்கும் விஷயங்கள் கேட்க ஆரம்பிக்கிறது. அவர்களின் உள் மன ஓட்டங்கள் அனைத்தும் இவனுக்கு தெரிய வருகிறது. மூன்றாவது காரணம் ஹீரோ Mel Gibsonனின் நடிப்பு.
விசில் படத்தில் விவேக்கிற்கு ஷாக் அடித்து பெண்கள் மனதில் நினைப்பதையெல்லாம் கேட்கும் சக்தி கிடைக்கும் நிலையை காமெடியாக காட்டியிருப்பார்கள். ஆனால் அதை சீரியஸாக இந்தப் படத்தில் சொல்லியிருப்பார்கள்.
ஆண்களின் உலகமே பெரியது என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவன் மெல்ல மெல்ல பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், தன்னை அறியாமலேயே அவர்களின் பக்கம் சாயும்பொழுதும், அதனால் கிடைக்கிற அன்பையும் அரவணைப்பையும் உணரும்பொழுதும் ஹீரோ நெகிழும் தருணங்கள் அருமை.
வசனங்கள் பெண்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இருந்தன. குறிப்பாக கீழ்வரும் வசனம் என்னை மிகவும் கவர்ந்தது,
"A women wouldn't have screwed over the women she loved"
நேரம் கிடைத்தால் இந்தப் படத்தைப் பாருங்கள்.
Movie: What women want
Year: 2000
OTT: Amazon Prime