⭐ Review

Book review : சொர்க்கத்தீவு by சுஜாதா

★★★★4/5
February 16, 2026
Book review : சொர்க்கத்தீவு by சுஜாதா

சொர்க்கத்தீவு 1974ல வந்த சுஜாதாவோட முதல் அறிவியல் புனைவு.

அய்ங்கார் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். அவரை ஒரு வினோதமான தீவுக்கு கடத்திட்டு போய்டுறாங்க. அந்த தீவுல இருக்க பிரஜைகள் பொம்மைகள் மாதிரி இருக்காங்க. கொஞ்சம் தமிழ் வார்த்தைகளுக்கு மேல் தெரியாது. 55 வயதுக்கு மேல் கொல்லப்படுவார்கள். குழந்தைகள் பொதுவாக வளர்க்கப்படுவார்கள். யார் அப்பா அம்மா என்று தெரியாது. இவர்கள் அனைவரும் தினசரி உடல் நிலையத்துக்குப் போய் மருந்துகள் எடுக்கணும். அந்த மருந்துகள் அவங்க உணர்ச்சிகளை சமன்படுத்த உதவும். வெறும் இயந்திரங்களாக மட்டுமே இருக்கும் இந்த மனித பொம்மைகளை பார்த்து முதலில் வியப்படையும் அய்ங்கார், அதற்குப் பிறகு ஒரு இயக்கத்தால தொடர்பு கொள்ளப்படும்பொழுது அந்த இயக்கத்துக்கு உதவுகிறானா இல்லையா என்பதே மீதி கதை.

ஒரு தனிமனித obsession to build a perfect society எந்த மாதிரி விபரீத முடிவுகளை எடுக்க வைக்கும் என்று தோன்றியது. விஞ்ஞானம் மற்றும் இளமை மட்டுமே அந்தத் தீவில். பெண்கள் வெறும் போகப்பொருள். இந்தத் தீவில் உள்ள பிரஜைகளால் ஆட்சியாளராக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் தான் இது சொர்க்கத்தீவு, பொம்மைகளாக வாழும் பிரஜைகளுக்கு அல்ல.

விஞ்ஞான சிறுகதைகள், என் இனிய எந்திரா மற்றும் மீண்டும் ஜீனோவிற்கு பிறகு நான் வாசிக்கும் சுஜாதாவின் அறிவியல் புனைவு இது. அருமையான படைப்பு.