Book review: வெக்கை by பூமணி

ஒரு கொலை செய்த மகன் சிதம்பரத்தை அவனுடைய தந்தை மற்றும் குடும்பத்தினர், எப்படி காப்பாற்ற முயல்கின்றனர் என்பதே இந்தக் கதை. ஆசிரியரின் ஊரான கோவில்பட்டியின் வட்டார மொழியில் எழுதப்பட்ட ஒரு கிளாசிக் நாவல். சிதம்பரமும் அவனுடைய அய்யாவும் ஊரைச் சுற்றி மறைந்து வாழும் அந்த சூழலிலேயே அதன் வாழ்வியலை அழகாக விவரித்து இருக்கிறார் ஆசிரியர்.
அசுரன் திரைப்படத்தைப் முன்னமே பார்த்த காரணத்தினால் எனக்கு கதை முழுக்க சிதம்பரமாக கென் கருணாசும், அவனுடைய அய்யாவாக தனுஷுமே தெரிந்தார்கள். ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் அவர்கள் என்ன செய்வது என்று யோசிப்பதும், கிடைத்ததை சாப்பிட்டு தூங்குவதும், உயிரைப் பாதுகாக்க எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பதும், நடு நடுவே flashback செல்வதும் என்று கதை அப்பா மகனை முன்னிறுத்தியே நகர்கிறது.
இந்தக் கதையின் மூலமாக சாதி அரசியல், தண்டனைச் சட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து எழுப்பியுள்ளார் ஆசிரியர். வட்டார மொழி பல இடங்களில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிதம்பரத்தின் மாமா, அத்தை, ஆத்தா மற்றும் வடக்கூரான் முக்கிய கதாபாத்திரங்கள். இந்தக் கதைப் படித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.