Book review: வனப்பேச்சி by தமிழச்சி தங்கபாண்டியன்

கிராமிய மணம் படிந்த சில கவிதைகள், நகர்ப்புற வாழ்க்கையின் தன்மையைப் குறித்து சில கவிதைகள் மற்றும் சமூக அவலங்களின் வெளிப்பாடாக சில கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள்,
பகிரப்படாத நேசத்தின் துயரென்னைத் தின்கிறது தனக்குத்தானே கட்டிக் கொண்ட கைகளின் தனிமை போல.
மின்விசிறிக்கு மட்டுமே பழக்கப்பட்ட பாழும் திரைச்சீலைகளை விலக்கி இரவின் வெளிக்காற்றிற்காய் சன்னல் திறந்தால், நாளின் இரைச்சல்களை வெற்றிலையாய் மென்று எச்சங்களை மட்டுமே சுண்ணாம்புச் சுவரில் எறிந்துவிட்டுப் போயிருக்கிறது நமத்துப்போன இந்த நகர்ப்புறத்துக் காற்று.
வெள்ளரிப் பிஞ்சுகளுக்குப் பதிலாக வெயில் வாங்கி வந்தேன் வியர்த்தொழுகக் கூவும் சிறுமியிடம்.
கிராமத்து சிறு பெண் தெய்வமான "வனப்பேச்சி" இந்த கவிதைகளில் அங்கும் இங்குமாக வருகிறாள். அவளை நகர்ப்புறத்திற்கு கூட்டி வர முயற்சித்து இருக்கிறார் ஆசிரியர். நகர்ப்புற வாழ்க்கையின் உறவுச் சிக்கல்களையும் பதிவு செய்திருக்கிறார்.