⭐ Review

Book review: பாட்டுவாசி by இளம்பரிதி கல்யாணகுமார்

★★★★4/5
March 6, 2026
Book review: பாட்டுவாசி by இளம்பரிதி கல்யாணகுமார்

திரைப்படங்கள்ள வர பாடல்களைக் குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.

அன்றாட நம்ம வாழ்க்கை ஓட்டத்துல கேக்குற பாடலையே மறந்துபோற சூழ்நிலையில ஒரு பாட்டை ரசிச்சு கேட்டு, ஒவ்வொரு வரியையும் ஆராய்ஞ்சு அதற்கான அர்த்தத் தேடி கண்டுபிடிச்சு, ஒரே மாதிரி இருக்குற பாடல்களை compare பண்ணி அதைக் கட்டுரைகளா எழுதி இருக்கிறத படிக்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. இதுல குறிப்பிட்டு இருக்க முக்கால்வாசி பாடல்களை நான் கேட்ருக்கேன் ஆனா இவ்வளவு ரசிச்சு கேட்டு இருப்பேனானு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும்.

குறுந்தொகை, பெரியபுராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்கள்ல இருந்துலாம் மேற்கோள் காட்டி எழுதி இருக்காரு ஆசிரியர்.

மடை திறந்து பாட்டை நானும் ஆசிரியரைப்போல முதன் முதலில் remix versionஇல் தான் கேட்டேன். அதன் பாடல் வரிகள் இன்னமும் எனக்கு அத்துப்படி. SPB அப்பாடலை மேடையில் பாடும் நிகழ்ச்சியை விவரித்த விதம் அழகு. உத்தமவில்லனில் வரும் சாகாவரம் பாடலை decode செய்த விதம் அருமை.

வெந்து தணிந்தது காட்டில் வரும் மல்லிப்பூ பாடலை விவரித்து விட்டு பிரிவுழல்வதால் வாடும் அதன் male version songஆன newyork nagaram பாடலையும் compare பண்ணி எழுதிய பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பொருள் ஈட்டும் நோக்கோடு தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவனை நினைத்து பாடலாசிரியர் தாமரையால் எழுதப்பட்ட பாடல் மல்லிப்பூ. அதையே கவிஞர் வாலி சில்லென்று ஒரு காதலில் நியூயார்க் நகரம் பாடல் மூலம் தலைவன் எவ்வாறு தலைவியை நினைத்து தவிக்கிறான் என்பதை விவரித்திருப்பார். இதே களத்தில் சங்க கால நாயகன் தலைவியைப் பிரிந்து பொருள் ஈட்ட செல்ல வேண்டாம் என்ற முடிவை முன்னெடுத்து வைக்கும் பாடலையும் குறுந்தொகையிலிருந்து எடுத்து விளக்கி உள்ளார் ஆசிரியர்.

ஒரு பேரரசன் புலம்பல் மற்றும் பெம்மானே - இறுதி நம்பிக்கை இரண்டு கட்டுரைகளும் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி இன்னும் பல புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள வழிவகுத்தது.

பாடலாசிரியர் வரிகளில் ஆரம்பித்து, பாடல் படமாக்க பட்ட விதத்தை உணர்த்தி, பாடல் புகுத்தப்பட்ட இடத்தையும், அதன் உண்மை அர்த்தம் என்ன என்று ஆராய்ந்து மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார் ஆசிரியர். பள்ளிப் படிப்பிற்கு கோனார் உரை போல திரைப்படப் பாடல்களைப் புரிந்து கொள்ள இந்த பாட்டுவாசி.

ஒரு பாடலின் வரிகளில் இருந்து இன்னொரு பாடலின் வரியை connect செய்து அதன் மூலம் ஒரு முழுக் காட்சியை நாம் கண் முன் கொண்டு வருகிறார். அவருக்கு அவருடைய தமிழ் ஆர்வம் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது என்னால் உணர முடிகிறது.