Book review: காதலே கதிமோட்சம் by யாத்திரி
★★★★★4/5
February 26, 2026

"காதல் என்பது வெறும் உணர்வல்ல... அது ஒரு தேடல், ஒரு விடுதலை, ஒரு கதிமோட்சம்!"
யாத்திரியின் 'காதலே கதிமோட்சம்' வாசித்து முடித்தேன். காதலர்களுக்குள் உண்டாகும் சிக்கல்கள், ஊடல், தவிப்பு, சலனம் மற்றும் மனத்தாங்கள்களை ஆசிரியர் மிக அழகாகச் எழுதியிருக்கிறார். காதலை ஒரு வாழ்வியல் தத்துவமாக அணுகும் விதம் தனித்துவம்.
காதலில் விழுந்தவர்களுக்கும், காதலின் ஆழத்தைத் தேடுபவர்களுக்கும் இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கும்.