Book excerpt: ஆகாசம் நீலநிறம் by விக்ரமாதித்யன்
May 13, 2026

எனக்குப் புரிந்த மற்றும் பிடித்த சில கவிதைகள் இதோ,
வாழ்க்கை
பறத்தல் சந்தோஷமானது
ஆனால் பட்டுப் பூச்சிகள்
மல்பரி இலைகளில் தூங்கும்.
காரணம்
“ஏன் தாடி வளர்க்கின்றாய்?” என்று
கேட்கின்ற நண்பர்களே
இழப்பதற்கும் வளர்ப்பதற்கும்
வேறென்ன இருக்கிறது
வேலையில்லா இளைஞனுக்கு?
யதார்த்தம்
வானத்துக்குக் கீழே
பழைய பூமிதான்
பூமிக்கு மேலே
பழைய வானம்தான்
பிரபஞ்ச வெளியிலில்லை
மன வெளியில் மட்டுமே
சுதந்திரமாகத் திரியலாம்
வேறென்ன செய்யலாம்.